ads

இனி பழைய வாகனங்களுக்கு அனுமதி இல்லை | Learning Studio

ஆம் நீங்கள் தலைப்பில் படித்தது போலவே 
இனிமேல் பழைய வாகனங்களுக்கு அனுமதி இல்லை 
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அங்கு நாம் சென்று வருவது இயல்பான ஒரு விஷயம் தான் ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக அங்கு தேவஸ்தானம் சில மாதங்களாக மூடியிருந்ததால் கோயிலுக்கு மக்கள் யாரும் செல்லவில்லை.
கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக இப்பொழுது திருப்பதி தேவஸ்தானம் கோயில் நடைகளை திறந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று காலத்தில் ஒரு இயற்கை நல்வினை கண்டறியப்பட்டது. இயற்கையை பாதுகாப்பதற்காக  திருப்பதி மலைப்பாதையில் பயணிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு இனி அனுமதி இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 திருப்பதி திருமலை கூடுதல் எஸ்பி   இராமையா நேற்று கூறியதாவது திருமலையில் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் காரணமாக திருமலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதி அளிக்கக்கப்படாத போது மலைப்பாதையில் வாகனங்கள் செல்லாதால் திருமலையில் பசுமையான சூழ்நிலை நிலவியது.
அதைத் தொடர்ந்து பராமரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது எனவே பத்து ஆண்டுகள் கடந்த வாகனங்கள்  மற்றும் தகுதி சான்றிதழ் இல்லாத வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
ஏனெனில் ஒரு வாகனம் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஓட்டினால் அதில் இருந்து புகை அதிகம் வர கூடும் என்பதால் இவ்வாறு கூறியுள்ளனர்.
அதாவது 2010ஆம் ஆண்டிற்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் இதில் அடங்கும் திருமலைக்கு வரும் பக்தர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments