ads

இனி பம்பர் கிடையாது? | வாகனத்தில் இனி பம்பர் வைக்ககூடாது | மோட்டார் வாகன சட்டம் | Wecares

பம்பர்களை அகற்றவில்லை என்றால் வாகனங்கள் பறிமுதல் என எச்சரிக்கை


வாகன ஓட்டுநர் விதிகளின் படி பம்பர் மற்றும்  அதிக ஒலி எழுப்பும் சைலண்சர் போன்றவை வாகனத்தில் பொறுத்த கூடாது என்ற சட்டம் ஒன்றை வெளியிடப்பட்டது.

அதன் நகல் கீழே உள்ளது


பம்பர் பயணபவிடுதுவதவுகள்:

1.கார்களின் முன் பம்பர் வைப்பதால் விபத்து ஏற்படும் போது கார்களில் விபத்து ஏற்படும்போது சென்சார் என்ற கருவி மிகவும் பயன்படுகிறது ஒரு பொருள் (வாகனம்) வந்து அதன் மீது தாக்கும் பொழுது அது வாகனத்தில் உள்ள ஏர்பேக்கை (AIRBAG) ஆக்டிவேட் செய்கிறது எனவே அந்த விபத்திலிருந்து காயம் எதுவும் இல்லாமல் தப்பிக்கலாம்.ஆனால் பம்பர் பொறுத்தி இருந்தால்  ஒரு பொருள் இடிக்கும் பொழுது அதன் தாக்கம் பம்பர் வரை மட்டுமே உள்ளது. இதனால்  சென்சார் செயல் படாமல் போகவும் வாய்ப்பு உள்ளது எனவே தான் இது போன்ற ஒரு சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

2.  வாகனத்தில் பம்பர் பொருத்தினால் அது வாகனத்தின் எடையை கூட்டும் இதனால் வாகனத்தின் மைலேஜ் குறையவும் வாய்ப்புள்ளது.


24-12-2020 நிகழ்ச்சி

பம்பர்களை அகற்றவில்லை என்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்துள்ளார் கிருஷ்ணகிரி டோல்கேட்டில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அன்புச்செல்வன் மற்றும் மாணிக்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகனசோதனை மேற்கொண்டனர் அப்போது போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக மினி சரக்கு மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பர்களை பறிமுதல் செய்தனர் இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்றுதல் வாகன கண்ணாடிகள் ஒட்டப்பட்டுள்ள கருப்பு ஸ்டிக்கர் அகற்றுதல் இருசக்கர வாகனங்களில் மாற்றப்பட்டுள்ள சைலன்ஸர் மாற்றுதல் ஆகிய பணிகள் நடந்தன மேலும் வாகனங்களில் பிரேக் லைட் இண்டிகேட்டர் லைட் மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவிஆ ஆகியவைவேலை செய்கிறதா பதிவு எண் மோட்டார்வாகன விதிகளின்படி எழுதப்பட்டுள்ளதா என தணிக்கை செய்யப்படுகிறது. அவ்வாறு இல்லை என்றால் அபராதம் விதிப்பதோடு வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments