ads

சுங்கச்சாவடியில் பாஸ்டேக் கால அவகாசம் நீடிப்பு | முழு விவரமும் தமிழில் | Wecares


நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் டிஜிட்டல் முறையிலான (பாஸ்டேக்) கட்டண வசூல் நடைமுறைக்கு அடுத்த மாதம் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருப்பதால் வரிசையில் காத்திருப்பதால் நேரம் மற்றும் எரிபொருள் விரயமாகின்றன. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் நடைமுறை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியது. மின்னணு அட்டைகளை வங்கிகள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன இவற்றை வாங்கி வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டினால் போதும் சுங்கச்சாவடியை அந்த வாகனம் கடக்கும் போது அங்குள்ள கேமரா கருவி மூலம் சுங்க கட்டணம் தானாகவே உரிமையாளரின் சேமிப்புக்கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும்.  
 
இதனால் வாகனங்களின் காத்திருப்பு முற்றிலுமாக குறைந்து வருகிறது சுங்கச்சாவடிகளில் உள்ள பல்வேறு வாயில்களில் தற்போது ஒரு வாயிலில் மட்டுமே ரொக்கம் வசூலிக்கப்படுகிறது மற்ற அனைத்து வாயில்களிலும் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 80 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் கட்டண நடைமுறைக்கு மாறிவிட்டன இதை 100% ஆக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது எனவே சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் இல்லாமல் பயணிக்கும் வாகனங்களிடம் தற்போது இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந் நிலையில் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இன்று முதல் பாஸ்டேக் முறையில் மட்டுமே வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமீபத்தில் அறிவித்தது இந்த கால அவகாசத்தை பிப்ரவரி 15 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

Post a Comment

0 Comments