ads

இனி லைசென்ஸ் எளிதில் பெறலாம் | Getting license is very much easier

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.


அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை முறையாக ஓட்டினால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வந்தது இந்த நடைமுறைகளில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை செய்துள்ளது.

 உரிய விதிகளின்படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை கொண்டு இருக்க வேண்டும் அவர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய கணினிவசதிகள் இருக்க பயிற்சியாளர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற வரா இருக்க வேண்டும்.

 போக்குவரத்து குறியீடுகள் போக்குவரத்து விதிமுறைகள் வாகன கட்டமைப்பு போது தொடர்பு முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும். என்ற கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற பல்வேறு அமைப்புகளில் கற்பிக்க வேண்டும்.

இதுபோன்ற தீவிர பயிற்சி அளித்த பிறகு சென்சார் பொருத்தப்பட்ட பிரத்தியேக ஓடுபாதையில் வாகன சோதனை நடத்தப்பட்டு வீடியோவாக பதிவு செய்யப்படவேண்டும்.

என்ற பயிற்சிகளில் வெற்றி பெறும் ஓட்டுநர்கள் உரிய சான்றிதழ்களுடன் ஆர்டிஓ அலுவலகம் சென்ற வாகனம் ஓட்டி காட்டாமலேயே லைசன்ஸ் பெற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

லஞ்சம் கொடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லைசென்ஸ் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஓட்டுநர் உரிமம் பெற கடுமையான விதிமுறைகளை மத்தியசாலை போக்குவரத்து அமைச்சகம் இந்த மாற்றங்களை செய்துள்ளது.

Post a Comment

0 Comments